தஞ்சாவூர், மே.03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் இஸ்லாமிய மதக் குரு அப்துல் ரஹீம் (53). மதுரையை சொந்த ஊராக கொண்ட அவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அதிராம்பட்டினம் வந்து இஸ்லாமிய மத குருவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நேற்று மாலை 6 மணி அளவில் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையிலிருந்து – சேர்மன்வாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதில் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். மேலும் அவ் விபத்தில் பலத்த காயமடைந்த அப்துல் ரஹீம் ஆபத்தான நிலையில் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்து மரணமடைந்துள்ளார்.
அவ்விபத்துக் குறித்து அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இரண்டு பைக்குகள் மோதிக் கொள்ளும் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.