தஞ்சாவூர், பிப். 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பழைய மாரியம்மன் கோவில் சாலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஜெய கணபதி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு, நேற்று விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், யாகசாலை பூஜைகள் ஆகியவை நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்று யாகசாலை பூஜைகள் செய்து மஹாபூர்ணாஹூதி நடைபெற்று மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று, விமான கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர், பின்னர் சுவாமிக்கு அபிஷேகமும், மஹா தீபாரதனையும் காட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் இனிதே நடைப்பெற்றது. அதில்  பொதுமக்கள், பக்தர்கள் என திரளானவர்கள் பங்கேற்று மனமுருகி சுவாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here