செம்மஞ்சேரி, மார்ச். 15 –

மதுகுடிக்கலாம் வா என்று அழைத்துச் சென்று நண்பரை கொலை செய்த இருவர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் மூலம் சரணடைந்தனர்.

சென்னை ஓ.எம்.ஆர் சாலை செம்மஞ்சேரி எழில்.முகாநகர்,  ஜவஹர் நகர் செல்லும் பிரதான சாலை பக்கமாக உள்ள முட்புதருக்குள் நண்பர் அருண் என்பவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக வழக்கறிஞர் ஒருவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இருவரை சரணடைய செய்தார்.

பின்னர் போலீசார் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த வெள்ளிகிமை (11.03.2022) அன்று சென்னையில் வசித்து வரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அருண், அவர்களது நண்பர்களான சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த 40-வயதான சிதீஷ், சென்னை கண்ணகிநகரை சேர்ந்த 39-வயதான விஜய் (எ) மணி ஆகிய மூவரும் ஓ.எம்.ஆர் சாலையை ஒட்டியுள்ள முட் புதர் ஒன்றில் மது அருந்தி கொண்டிருந்ததாகவும், அப்பொழுது ஏற்பட்ட தகராறில் அருகில் கிடந்த கல்லை எடுத்து அருண் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து அவர்கள் இருவரும் வெளியேறியுள்ளனர்.

மறுபடியும் சம்பவ இடத்திற்கு மறுநாள் சென்று பார்த்த போது அருண் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. பயத்தில் அங்கிருந்து தப்பி சென்ற இருவரும் செய்வதறியாமல் இருந்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாகியும் அருண் கொலையான தகவல் செம்மஞ்சேரி போலீசார்க்கு தெரியவராததால் கொலை செய்த சதீஷ் மற்றும் விஜய் (எ) மணி இருவரும் வழக்கறிஞர் ஒருவர் மூலம் நீதிமன்றத்தில் சரணடைய சென்றுள்ளனர்.

சதீஷ் மற்றும் விஜய் (எ) மணி இருவரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து நடந்த விவரங்களைக் கூற அவர் இருவரையும் அழைத்து வந்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஆய்வாளர் சீனிவாசனிடம் ஆஜர் படுத்தினார்.

பின்னர் கொலை சம்பவம் அரங்கேறிய பகுதிக்கு சென்று செம்மஞ்சேரி போலீசார் தலை நசுங்கி இறந்து கிடந்த அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அருணை கொலை செய்தற்கான காரணமாக போலீசின் விசாரணையில், தங்களது செல்போனை திருடியதாக எண்ணி திட்டம் தீட்டி அருணை மது குடிக்க அழைத்து சென்றதும், அங்கு அருணிடம் தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரத்தில் அருண் தலையில் கல்லை போட்டு விட்டு சென்று விட்டதாகவும்,  அடுத்த நாள் வந்து பார்த்த போது இறந்தது தெரிய வந்ததால் சரணடைய சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார் பதிவு செய்து சட்ட மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here