திருவாரூர், ஏப். 05 –
திருவாரூர் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் வழியில் சாலை ஓரத்தில் இருபுறங்களிலும் இருந்த நூற்றுக்கணக்கான தமிழகத்தின் தேசிய மரமான பனை மரங்களை நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டி அழித்தார்கள்.
இதனால் பொதுமக்கள் மற்றும் பனை மர ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளார்கள். மேலும், வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு பதிலாக மரங்கள் எப்போது நடப்படும் எனவும் அப்போது அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
மேலும், திருவாரூர் மாவட்டம் என்பது ஒரு விவசாய மாவட்டம் என்பதால் பனை மரத்தின் நன்மைகள் கருதி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பனை மரங்கள் அதிகம் உள்ளதாகவும், மேலும் அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளதென அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நமது மாநிலத்தின் அடையாளமாக திகழும் அப்பனை மரங்களை அரசு சார்பிலேயே நெடுஞ்சாலை துறையினர்கள் மூலமாகவே வெட்டி அழிக்கப்பட்ட அந்நிகழ்வு அனைவரையும் தீராத் துயத்தில் தங்களை ஆழ்த்தியுள்ளதாக அவர்கள் அப்போது தெரிவித்தனர்.
மேலும், இதுக்குறித்து நெடுஞ்சாலை துறை அலுவலர்களிடம் கேட்ட பொழுது சென்னை கன்னியாகுமரி தொழிற்பேட்டை சாலை திட்டத்தின் படி திருவாரூர் மயிலாடுதுறை சாலை சுமார் 100 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. எனவும் ஆகவே அப்பணிக்காக அரசு அனுமதியுடன் அப்பனை மரங்கள் வெட்டப்பட்டு வருவதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.






















