மீஞ்சூர், மார்ச். 15 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி வட காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இன்று காலை 8:21 மணிக்கு முன்னாள் பால்வளத்துறை அமைச்சர்.க.சுந்தரம். பிஜேபி மாநில செயர்குழு உறுப்பினர் ஆர் எம். ஆர். ஜனகிராமன். வி.ஆர்.பகவான். முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணி. மீஞ்சூர் திமுக நகரகழக செயலாளர் மோகன்ராஜ். உள்ளிட்டோர்கள் வடம் பிடித்து இழத்தனர்.

தேர் நகரம் முழுவதிலும் வளம் வந்து 11.40 மணி அளவில் தேர் நிற்கும் நிலை வந்தடைந்து. இந்த திருவிழாவை காண மீஞ்சூர் நகரம் சுற்றியுள்ள முப்பதிற்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவிழாவில் பங்கேற்று தேரை வடம் பிடித்து .கோவிந்தா. கோவிந்தா .என கோஷங்களுடன் இழுத்தனர். இதில் பலதரப்பட்ட மக்களும் வேண்டுதலை முன்னிட்டு அன்னதானம். குளிர்பானங்கள் .மோர். உள்ளிட்டவைகளில் பொது மக்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்திலும், கூட்டத்தில் அசம்பாவிதம் மற்றும் கூட்ட நெரிசலை நெறிப்படுத்தும் பணியில் மீஞ்சூர் காவல் நிலைய காவலர்கள் தகுந்த எண்ணிக்கேஐயில் பங்கேற்று செயலாற்றினார்கள்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here