கும்பகோணம், மார்ச். 14 –
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலக்காவேரி பகுதியில் நேற்று முன்தினம் மார்ச் 12.03.22 அன்று இரவில் ஒரு பட்டறையில் வெளியே அடிக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.ஐம்பாதாயிரம் மதிப்பிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புக்களை, லோடு ஆட்டோவில் வந்த இரண்டு நபர்கள் அந்த பொருட்களை அங்கிருந்து திருடிச் சென்றனர்.
இது தொடர்பாக கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் ரவிப்பிரியா காந்தபுனேனி உத்தரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் மற்றும் கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் கும்பகோணம் தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன், SSI ராஜா, HC பாலசுப்ரமணியம், சுரேஷ், நாடிமுத்து, ஜனார்த்தனன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் குற்றத்தில் ஈடுபட்ட கும்பகோணம் மூப்பகோயில், ஏரகரம் வாலிநடப்பு மார்டின் என்பவரின் மகன் அமர்நாத் வயது 25 மற்றும் அதேப்பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரின் மகன் நிஷாந்த் வயது 22 ஆகிய இருவரையும் பிடித்து அவர்களிடமிருந்து திருடுபோன பொருட்களை மீட்டனர். மேலும், திருட்டுக்கு பயன்படுத்திய மகேந்திரா ஆல்பா லோடு ஆட்டோ ,ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி இருவரையும் சிறையில் அடைத்தனர்.























