சென்னை, ஜன. 22

ரூ 7 கோடி மதிப்பிலான ஹெராயின் மற்றும் ரூ 69.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் இதர பொருட்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் செய்து இருவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

உகாண்டாவில் இருந்து சென்னைக்கு கடந்த 2022 ஜனவரி 20 ஆம் தேதி அன்று அதிகாலை 3 மணிக்கு ஏர் ஃபிளைட் அரேபியா மூலம் வந்திறங்கிய ஜூடித் டிவினாம்வெபெம்பெசி (29), சென்னை சுங்கத்துறையின் விமான நிலைய உளவு அதிகாரிகளால் பயணிகளின் விவர சேகரிப்புக்காக தடுத்து நிறுத்தப்பட்டார். அவரைச்  சோதனை செய்து பார்த்த போது, அவரது உள்ளாடைகளுக்குள்  108 கேப்சூல் வடிவ மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றில் 1.07 கிலோ எடையிலான சுமார் ரூ 7 கோடி மதிப்பிலான ஹெராயின் இருந்தது. தெரிய வர அவரை தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985 மற்றும் சுங்க சட்டம் 1962-ன் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

அதே நாளில் துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்திறங்கிய ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியன் பட்டிணத்தை சேர்ந்த  முகமது ஆசிக்  சென்னை சுங்கத்துறையின் விமான நிலைய உளவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரைச் சோதனை செய்து பார்த்தபோது, 1.52 கிலோ 24 கேரட் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு சுங்க சட்டம் 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ 69.44 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் மின்னணு பொருட்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவரை கைது செய்து  இது குறித்து மேலும் விசராணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே ஆர் உதய் பாஸ்கர் செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here