திருவாரூர் மாவட்டத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்த இருவரை கைது செய்து, அவர்கள் அத் தொழிலுக்குப் பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்கள் உள்ளிட்ட நான்கு வாகனங்கள் மற்றும் 600 மதுப்பாட்டில்களை மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர்,ஆக. 30 –
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹெட்மட் மற்றும் அவருடைய நண்பர் (ஓட்டுநர் ) தினேஷ் ஆகிய இருவரும் இணைந்து, பாண்டிச்சேரியில் தமிழக டாஸ்மாக் கடைகளில் இருப்பது போல போலி மதுபானம் தயாரித்து, தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் நீடாமங்கலம் அத்திக்கடை முதலான பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில்,அதுக்குறித்து, தகவலறிந்த மதுவிலக்கு காவல்துறையினர் திருவாரூர் அருகில் உள்ள அவருடைய வீட்டை பரிசோதனை செய்யும் போது, அத்தொழிலுக்கு பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்கள் ஒரு டாட்டா ஏசி வாகனம், ஒரு புல்லட் பைக் மற்றும் 600 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தும் கைது செய்தும் மதுவிலக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.