தஞ்சாவூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நேற்று தஞ்சைக்கு வருகை தந்து வேட்பாளரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2014 முதல் 2024 வரை 10 ஆண்டு கால பாஜக ஆட்சி நல்ல திறமையான ஆட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி ஊழலற்ற ஆட்சியாக உள்ளது, காங்கிரஸ் கட்சி, திமுக கட்சி குடும்பமாக இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணியாக உள்ளதென தெரிவித்தார்.
மேலும் பாஜக நாட்டின் சேவையே லட்சியமாக கொண்டுயிருப்பதாகவும், ஆனால் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சி குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சிக்காகவும், ஊழல் செய்வதற்காகவும் உள்ளது தெரிவித்த அவர் தொடர்ந்து, கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள வைகோ காங்கிரஸ் கட்சியை பலமுறை குற்றம் சாட்டியுள்ளார் என தெரிவித்த அவர் ஆனால் தமிழக முதல்வர் இதுவரை வாய் திறக்கவில்லை என்பதேன் என கேள்வியெழுப்பினார்.
பாஜக தர்மத்தை காக்கும் கட்சி, நல்ல திட்டங்கள் வழங்கும் கட்சி, ஆனால் அவர்கள் கட்டப்பஞ்சாயத்து, ஜெயில் டு பெயில், பெயில் டு ஜெயில் என்று கனிமொழி, ராசா, சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் என பலர் உள்ளனர், அவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்பதுதான் அவர்களின் கனவெனவும், ஆனால் அண்ணாமலையின் என்மண், என் மக்கள் பாஜகவிற்கு புத்துணர்ச்சியாக உள்ளது என்றார்.
நிச்சயமாக பாஜக கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பான்மையில் வெற்றி பெறுவார்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி சனாதன தர்மத்தை பற்றி பேசுகின்றனர், ஆனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் கோயிலுக்கு செல்கின்றனர், ஹோமம் செய்கின்றனர், வெளியில் சனாதன தர்மத்தை பற்றி பேசுகின்றனர், ஓட்டு வங்கி அரசியல் செய்கின்றனர், மணல் திருட்டு, நிலம் திருட்டு, கட்டப்பஞ்சாயத்து, போதைப் பொருள் குற்றம், கஞ்சா ஆகியவற்றை கட்டுப்படுத்தவில்லை, இதுதான் திராவிட மாடலா என்று முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பினார்.
மேலும் விவசாயிகள் தண்ணீர் இன்றி பாதிக்கப்படுகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார், இந்த பேட்டியின் போது பாஜக மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்




















