திருச்சி, மே. 31 –

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடந்த மே 29 – 2022 ஆம் தேதியன்று ஆய்வு மேற்கொண்டார் . அப்போது அம்மருத்துவமனை தீவிர அவசரப்பிரிவில் அமைக்கப்பட்டு வரும் 32 புதிய அதிநவீன படுக்கைகளை பார்வையிட்டார். ஒவ்வொரு படுக்கைகளும் தலா ரூ.2.90 இலட்சமாகும்  இதில் 20 படுக்கைகள் பெரியவர்களுக்கும், 12 படுக்கைகள் குழந்தைகளுக்குமாகும். தொடர்ந்து, இந்த வார்டில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது உடன் அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் கே.வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அருண்ராஜ் மற்றும் மருத்துவத்துறை சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here