திருவாரூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் 71 ஆம் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருவாரூர் ஐபி கோவில் தெருவில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
அக்கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், சார்பணி நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் . மேலும் அப்பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில இலக்கிய அணி துணை தலைவர் கவிச்சுடர் கவிதை பித்தன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசும்போது..
தமிழ்நாட்டின் ஏற்றத்தை மாற்றத்தை உயர்வை வளர்ச்சியை ஒரு சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மீண்டும் மோடி ஆட்சி வந்தால் நாம் போடும் கடைசி ஓட்டு இதுவாகத்தான் இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை கடலில் கரைத்து விட்டு மனுதர்மத்தை அரசியலமைப்பாக மாற்றும் ஆபத்து இருக்கிறது என அப்போது அவர் எச்சரித்தார்.























