ஆவடி, அக். 29 –
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடியில் போக்குவரத்து துணை ஆணையாளர் அசோக் குமார் உதவி ஆணையாளர் ஜெயகரன் உத்தரவின் பேரில் இன்று கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி போக்குவரத்து மேற்கு மாவட்ட துணை ஆணையாளர் அசோக் குமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி அறிவுரைகள் வழங்கினார்.
கொரானா வைரஸ் தாக்கத்தை பற்றியும் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியப் படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது சில மாநிலங்களில் அதிக அளவில் பரவி வரும் கொரானா வைரஸ் தாக்கம் இருப்பதால் நம் மாநிலத்தில் பரவி விடாமல் தடுக்க தமிழக அரசு அதிக அளவில் முயற்சி செய்து வருகிறது.
அதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் அரசுக்கு நாம் உறு துணையாக இருந்து வீட்டிலிருந்து வெளியே செல்லும் பொழுது முக கவசம் அணிய வேண்டும் அடிக்கடி கிருமி நாசினி கையில் வைத்து கைகள் நன்கு கழுவ வேண்டும். பின்பு வீட்டிற்கு சென்றவுடன் நன்கு சோப்பினால் கைகளை கழுவி சுத்தப்படுத்த வேண்டும். என்றும் பொதுமக்கள் அனைவரும் இதனை கடைப்பிடிக்க வேண்டும். என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த கொரானா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆய்வாளர் கோதண்டன் உதவி ஆய்வாளர்கள் பாஸ்கரன் ராஜேந்திரன் பழனிவேல் எஸ் எஸ் ஐ. செல்வராஜ் உமாபதி கோபாலகிருஷ்ணன் வெங்கடாச்சலம் பாஸ்கர் ரகுபதி தலைமை காவலர் சத்தியன் உட்பட பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்த கொரானா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை லயன்ஸ் கிளப் சார்பாக சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்