கும்பகோணம், பிப். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் பித்ரு தோஷ நிவர்த்திக்கு மிக சிறப்பான பரிகார தினமாக கருதப்படும் நாள் மாசிமகமாகும். அதனால், மாசிமகத் தீர்த்தவாரியின் போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும். எனவும், மாசி மகத்தன்று மகாமக குளத்தில் பித்ரு தர்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது மக்களிடையே நிலவி வரும் நம்பிக்கையாகும்.

மேலும் தேவேந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்ராவில் நீராடி, சிவ பூஜை செய்து, சாப விமோசனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் 5 பாவகமான பூர்வ புண்ணிய ஸ்தானமும், 9ஆம் பாவகமான பாக்ய ஸ்தானமான முக்கியமான இடங்கள். இந்த ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் இருந்தால் அவர்களுக்குப் பித்ரு தோஷங்கள் இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்தப் பித்ரு தோஷங்கள் பலவித தடைகளை உருவாக்கும். இந்நிலையில் அதனைப் போக்குவதற்காக மாசிமகத்தன்று பிரசித்திபெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். எனவும் நீராடி முன்னோர்க்கு தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும் எனகூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாசிமகத்தை முன்னிட்டு மகாமக குளம், பொற்றாமரை குளம், காவிரி ஆற்றில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here