சென்னை, செப் . 24 –
தேர்வாணையத்தால் கடந்த ஜன – 3 – 2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – 1 ( தொகுதி -1 ) –ல் அடங்கிய பணிகளுக்கான குடிமைப்பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதார ர்களுள், தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தனது இணைய வழி விண்ணப்பத்தில் கோரியவர்கள். தமிழ் வழியில் முதல் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வி பயின்றவதற்கான சான்றுகளை ஆக 16 2021 முதல் செப் 16 – 2021 வரை இணையவழி பதிவேற்றம் செய்த விண்ணப்பதாரர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்ற சான்றிதழ்களை சரிப்பார்ப்பதற்கு உரிய சான்றிதழ்களோடு குறிப்பாணையில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் தேர்வாணைய அலுவலகத்திற்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள் என தேர்வாணைய செய்திகுறிப்பில் வெளியிட்டுள்ளது.
- பள்ளி முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை
- மேல்திலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டப்படிப்பு
- பட்டப்படிப்பு
இது குறித்து தகவல் உரிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப் படும். இதைத் தவிர தேர்வாணைய இணையதளம் மூலமாகவும் இது குறித்த குறிப்பாணையினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் நேற்று முன்தினம் அதன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.