திருவள்ளூர், ஏப். 21 –

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், தமிழ் வளர்ச்சித்துறை துறையின் சார்பாக அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளிற்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாணவர்களுக்கிடையேயான பேச்சப்போட்டிகள் கடந்த ஏப் 19 ஆம் தேதி நடைப்பெற்றது.

இப்போட்டியில் கலந்துக்கொள்ள மாவட்டத்திலுள்ள 22 பள்ளிகளில் இருந்து 24 ம1ணவ, மாணவியர்கள் பங்கேற்றன்ன்றனர். இந்நிகழ்ச்சி பிற்பகல் 2 மணியளவில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி துவங்கப்பட்டது. இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 36 மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

பள்ளி மாணவர்களுக்கான நடைப்பெற்ற பேச்சுப்போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ.5 ஆயிரம் புழல் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த த.கீர்த்திகாவும், இரண்டாம் பரிசுத்தொகை ரூ. 3 ஆயிரம் புன்னப்பாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் லி.வினோத்குமாரும், மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் பரிசுத் தொகை காக்களூர் சி.சி.சி.மெட்ரிக் மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி சா.ஷெக்கினாஷேரன் மேரியும் பெற்றுள்ளனர். மேலும் அரசுப்பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுத்தொகை ரூ. 2 ஆயிரம் கொமக்கம்பேடு, அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி இர.கோபிகா, பழைய அலமாதி அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ப.ராதிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ. 5 ஆயிரம் பட்டாபிராம், தருமமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி வை.ராகவியும், இரண்டாம் பரிசுத்தொகை ரூ.3 ஆயிரம் பட்டபிராம், ஆலிம் முகமது சாலிக் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ர.பிரியதர்ஷினியும், மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் பரிசுத்தொகை வேப்பம்பட்டு ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச்சேர்ந்த மாணவி மு.மஞ்சுளா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றிப்பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டுச்சான்றிதழ்களும் மற்றொரு நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்படும் என மாவட்ட நிருவாகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி உதவி இயங்குநர் சீ.சந்தானலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here