திருவாரூர், மே. 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

குறிப்பாக மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு மேலும், அரசு குளம் மற்றும் ஆறுகள் தூர்வாரப்படாத காரணத்தினால் நிலத்தடி நீரும் வற்றி போய் போர்  (ஆழ்குழாய் கிணறு) மூலமாக குறுவை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் குறுவை சாகுபடி பொய்த்து போகும் நிலை ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுக் குறித்து திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொறுப்பாளர் செந்தில் சொல்லும் போது.

மும்முனை மின்சாரம் எப்போது வரும் என்று தெரியவில்லை… நாங்கள் போர்-ஐ நம்பிதான் உள்ளோம். எங்களுக்கு விவசாய தொழில் தவிர வேறு எதுவும் தெரியாது.. தற்போது குறுவை பொய்த்து போய்விட்டது.. மின்சார வாரிய அதிகாரிகளும் சரியான பதில் கூறுவதில்லை. எனவே அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. என  கோரிக்கை வைத்தார்..

 

பேட்டி: செந்தில் (விவசாயி)

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here