திருவள்ளூர், ஏப். 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக வின் பொதுச்செயலாளராக எடப்பாடியாரும், கேப்டனின் மறைவிற்கு பின்பு தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட தானும் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவென்று திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து தேர்தல் பரப்புரை நிகழ்த்திய அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா கூட்டத்தில் தெரிவித்தார். மேலும் இத் தேர்தல் என்பது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல் எனவும், அப்போது அவர் தெரிவித்தார்.

திருவள்ளூர் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பியை ஆதரித்து திருவள்ளூரில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்த வேனில் நின்றபடி பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர்..

விஜய் பிரபாகரன் தொகுதிக்கு தேர்தல் பரப்புரை செய்ய நீங்கள் செல்லவில்லையா என பலரும் தன்னிடம் கேட்பதாக தெரிவித்த அவர் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் என் பிள்ளைகள் என்பதால்தான், தான் விருதுநகருக்கு தேர்தல் பரப்புரை செய்ய செல்லவில்லை என தெரிவித்தார்.

தேமுதிக அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என கருத்து கணிப்பு வந்து கொண்டு இருக்கிறது எனவும், தமக்குள் எவ்வளவோ துக்கங்கள் வேதனைகள், சோகங்கள் இருந்தாலும்… இந்த கூட்டணி நிச்சயம் நாளை சரித்திரம் படைக்கும். என்றக் காரணத்தால்தான் நான் 40 தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் நாங்கள் கூட்டணி அமைப்பதற்கு முன்பு வரை திமுக கூட்டணி 40 தொகுதியையும் வென்றெடுக்கும் என்று கருத்துக்கணிப்புகள் சொல்லியது.  ஆனால் இன்றைய கருத்துக்கணிப்பில் அதிமுக- தேமுதிக  கூட்டணி 30  தொகுதிகளிலும் வெற்றி பெறுமென தெரிவித்து வருகிறது எனவும், புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி, புரட்சி கலைஞர் ஆகிய மூன்று தெய்வங்களின் ஆசிர்வாதத்தோடு நாம் வெற்றி பெறுவது உறுதி. என்றும் ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பொதுச் செயலாளராகவும்,  கேப்டன் மறைவிற்குப் பின் தான் பொது செயலாளராக பொறுப்பேற்றபின்பு நாங்கள் இருவரும் சந்திக்கும் முதல் தேர்தல் இது என தெரிவித்தார்.

எத்தனையோ நிர்பந்தங்கள் எத்தனையோ மிரட்டல்கள் எத்தனையோ தடைகளையும் தாண்டி இந்த கூட்டணி அமைந்துள்ளதாகவும் இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல் இதுவெனவும், மேலும் இத் தேர்தலில் நாம் வெற்றி கண்டே தீர வேண்டும். என்றும் தேர்தல் வாக்குறுதிகளாக திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை  விரிவுபடுத்தி நவீனப்படுத்தப்படும். அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். அதே போல் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் சீரமைக்கப்பட்டு சுற்றுலாத் தலமாக மாற்றி அமைக்கப்படும் என்றும், மேலும்  திருவள்ளூர் மாவட்டம் வளர்ச்சியடைய நடவடிக்கை எடுக்கப்படும்.  அதே போல் பழவேற்காடு முகத்துவாரம் தூர்வாரப்படும் என்பது போன்ற தேர்தல் வாக்குறுதிகளையும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here