திருவிடைமருதூர், அக். 23 –

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு 50 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு கொரோணா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்  அரசு தலைமை கொறடா கோவி செழியன் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் கொரோனா பெரும் தொற்று பாதிக்கப்பட்டு உயிர் இழந்து பெற்றோர்களை இழந்து தவிக்கும் 15 குழந்தைகளுக்கு 50 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து  அரசு தலைமை கொறடா கோவி. செழியன் பேசுகையில் இந்தியாவில் முதன்முறையாக குறைவாக இருந்ததால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை மாற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலையை உணர்ந்து சட்டசபையில் ஒரு மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்ட இத்தகைய செயலானது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள் கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து செயல்களையும் செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here