விழுப்புரம் மாவட்டத்தில்  மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஐ.பி.எஸ் அவர்களின் உத்திரவின் பேரில் பல்வேறு இடங்களில் நடந்த வாகனத் தணிக்கையில்  மதுபானம் கடத்தலில் ஈடுப்பட்ட மூவரை கைது செய்தும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் மது பானங்களை பறிமுதல் செய்து போலீசார் அவர்ளை சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம், செப். 7 –

 

ஒலக்கூர் காவல்  நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் இருந்த போது அவ் வழியாக வந்த TN 25 BX 6260 என்ற டூவீலரில் 74 எண்ணிக்கையிலான புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் எடுத்து வந்த பிரசாந்த் வயது 25 தகப்பனார் பெயர் ஏழுமலை சாலை வேடு, வந்தவாசி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து டூவீலர் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தும் அவரை சிறையில் அடைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

அதைப் போன்று, வளவனூர் காவல் நிலைய ஆய்வாளர் தீபா தலைமையில்  குடுமியான் குப்பம் ஆஞ்சநேயர் கோவில் அருகே வாகன தணிக்கையில் இருந்த போது அவ்வழியாக வந்த TN 01 AX 4074 MARUTHI 800 என்ற காரில் சுப நிகழ்ச்சிகளுக்காக 74  பாண்டிச்சேரி மது பாட்டில் எடுத்து வந்த உளுந்தூர் பேட்டை கு.கிளியனூர், நாச்சியார் பேட்டையை சேர்ந்த நாராயண சாமி என்பவரின் மகன் 30 வயதுடைய ராஜராஜன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கார் மற்றும் மதுப் பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், வானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டாலன் குப்பம் அருகே ஆய்வாளர் சித்ரா வாகன தணிக்கையில் இருந்த போது புதுசந்தி குப்பம், புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் 49 வயதுடைய மூர்த்தி என்பவரிடமிருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன் படுத்தப் பட்ட அவரது வாகனம் PY 01 BC 5454 ACTIVA பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்து போலீசார் நடவடிக்கையை மேற் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மேலும் வாகனச் சோதனைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட கண்காணிப்பாளர் உத்திரவு விட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here