திருவேற்காடு, ஜூலை. 10 –
திருவேற்காடு நகர மன்றம் சார்பில் முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள்விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவேற்காடு நகர திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைஞரின் பிறந்தநாள் விழா மற்றும் திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடைப்பெற்றது.
இதில் திருவேற்காடு நகர மன்ற தேர்தலின் போது வாய்மொழி வாக்குறுதியாக திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறந்து விளங்கும் மாணாக்கர்களுக்கு லேப்டாப் பரிசளிக்கப்படும் என்று நகர மன்ற தலைவர் என்.இ.கே மூர்த்தி வாக்குறுதி அளித்து இருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக தற்போது வெளியான பொதுத் தேர்வில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு லேப்டாப்பை அமைச்சர் நாசர் இவ் விழாவில் பரிசாக வழங்கினார்.
மேலும் சலவை தொழிலாளிகளுக்கு சலவைப் பெட்டி மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மேலும், நிலுவையில் இருந்த ஒரு கோடி அளவிலான கடன் தொகைகள் வழங்கப்பட்டது