கும்பகோணம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், இன்னம்பூர் கிராமத்தில் உள்ள பரிவார சகித அருள்மிகு நாச்சியபிடாரி அம்மன், அருள்மிகு பத்திரகாளியம்மன், ஆலயத்தில் நாயன்மார்களால் பாடல் பெற்றதும், சூரியன், ஐராவதம், சுதன்மன முதலியவர்களால் வழிபட்டதும் ஆன திரு இன்னம்பூர் ஆலயத்தில் அருள்மிகு நாச்சியபிடாரி அம்மன், ஸ்ரீ பச்சை காளி, ஸ்ரீ பவளகாளி, ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இத்தகுச் சிறப்புமிக்க அவ்வாலயத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு பல மாதங்களாக நடைபெற்ற வந்த கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி சனிக்கிழமை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து இன்று 4ம் கால யாகசாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாஹதியும், தீபாராதனையும் நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து, மங்கல வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனை தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், சிவாச்சாரியார்கள் புனித நீர் நிரப்பிய கடங்களில் இருந்த புனித நீரை ஊற்ற மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அச்சிறப்புமிகு விழாவில் நூற்றுக்கணக்கானோர் திரளாக வந்திருந்து கலந்து கொண்டு சுவாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மூலவர்களுக்கு மகா அபிஷேகமும், மாலை காளியம்மன், புறப்பாடு நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாமை சொக்கலிங்கம், மற்றும் ஆலய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.