கும்பகோணம், மார்ச். 29 –
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா, பண்டாரவாடை கரைமேட்டு தெருவைச் சேர்ந்தவர் 55 வயதுடைய செல்வமணி என்பவர் இவரது கணவர் சீனிவாசன், மேலும் இவர்கள் இருவருக்கும் 3 பெண் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் செல்வமணியின் கணவர் சீனிவாசன் ஏற்கனவே இறந்து விட்டார். மேலும் மூன்று பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி அவர்களும் தனித்தனியாக அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மேலும் மூன்று ஆண்பிள்ளைகளில் பாலகிருஷ்ணன் என்பவர் ஏற்கனவே இறந்து விட்டார் தற்போது இருப்பது குமார் மற்றும் ரமேஷ் என்ற ஆண்பிள்ளைகள் அதில் ரமேஷ் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். குமார் அதே தெருவில் பத்து வீடு தள்ளி குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
மேலும் இந்நிலையில் வீட்டில் செல்வமணி மட்டும் தனியாக வசித்து வந்ததாக தகவல் தெரிய வருகிறது. இந்நிலையில், செல்வமணி ஐந்து நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் செல்வமணியின் வீட்டிற்கு தேடி வந்துப் பார்த்தபோது, அவரது பூட்டிய வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டு, அவரது உறவினர்கள் வீட்டின் கதவில் வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, அங்கு அண்டா ஒன்றில் உடல் அழுகிய நிலையில் செல்வமணி பிணமாக கிடந்துள்ளார். உடனடியாக இதுக் குறித்து அவரது உறவினர்கள் பாபநாசம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், கூடுதல் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், பாபநாசம் காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி, காவல்துறையினர், கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மற்றும் தடயங்களை சேகரித்தும் மேலும் விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து செல்வமணி உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டில் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



















