பட்டீஸ்வரம், ஏப். 11 –
கும்பகோணம் அருகாமையில் உள்ள பட்டீஸ்வரத்தில் தெருவில் சுற்றத்திரியும் நாய்களால், பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும், மேலும் சாலை விபத்துகளையும் ஏற்படுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதியில் வெகு நாட்களாக அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை இருந்து வந்ததது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பட்டீஸ்வரம் ஊராட்சி பகுதியில் தெருவில் சுற்றித்திரிந்துக் கொண்டிருந்த தெரு நாய்களை நள்ளிரவில் சுருக்கு கம்பி வைத்து சிலர் பிடித்து அதனை அடித்து கொன்றுள்ளனர்.
மேலும் அந்நிகழ்வினை தொடர்ந்து, அப்பகுதி வாசிகள் சிலர், தெரு நாய்களை அடித்துக் கொல்லக் கூடாது எனவும், மேலும் அதனைப்பிடித்து பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டு விட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தெரு நாய்களை அடித்துக் கொல்வதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது. என்றவாறு அச்செயலில் ஈடுப்பட்டவர்களிடம் அவர்கள் கேள்வியெழுப்பி அச்செயலை தடுத்துவுள்ளனர்.
இந்நிலையில், அடித்துக் கொல்லப்பட்ட நாய்கள் தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால் பொதுமக்களிடம் அதிர்ச்சியும், பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும் இச்சம்பவங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள், தெரிவிக்கும் போது கடந்த இரண்டு நாட்களாக பட்டீஸ்வரம் ஊராட்சி தெருக்களில் சுற்றித் திரியும் சுமார் 40 க்கும் அதிகமான தெருநாய்களை அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் சுருக்கு கம்பி வைத்து பிடித்து அடித்துக் கொன்றுள்ளனர்.
மேலும் அவர்களிடம் தெரு நாய்களை ஏன் அடித்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டால் ஊராட்சித் தலைவர் உத்தரவுப்படிதான் தெருநாய்களை பிடிப்பதாக கூறுகின்றனர். எனவே தெரு நாய்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஊராட்சி தலைவர் வெற்றிச்செல்வி கூறியபோது, பட்டீஸ்வரம் ஊராட்சி பகுதியில் தெருவில் சுற்றித்திரியும் நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து விட்டதாகவும், மேலும், அதனால் அந்நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையின் குறுக்கே அடிக்கடி பாய்ந்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி விடும் நிலை ஏற்பட்டு சில நேரங்களில் பலர் அவ்விபத்தில் உயிரிழக்க நேர்வதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும் இப்பிரச்சினைக் குறித்து முதல்வரின் தனி பிரிவுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் எனவும், மேலும் அதனைத் தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவின் பேரில் அத்தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது தன் மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாக சிலர் தெருநாய்களை பிடித்தவர்களை முற்றுகையிட்டு தகராறு செய்துள்ளனர். மேலும், இதுக்குறித்து உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலரின் கவனத்திற்கு இப்பிரச்சினைக் கொண்டு செல்லப்பட்டு, தற்போது தெருநாய்கள் பிடிப்பதையே நிறுத்திவிட்டோம் என்றவாறு ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.






















