நாமகிரிப்பேட்டை, மே. 31 –
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சிபிஐ, சிபிஎம் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நாமகிரிப்பேட்டை பேருந்து நிறுத்தம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு மற்றும் வேலையின்மை விலைவாசி உயர்வு, மற்றும் வெறுப்பு அரசியலை கண்டித்து சிபிஐ., சிபிஎம்., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் சிபிஐ. ஒன்றிய செயலாளர் K.சின்னுசாமி தலைமையில் நடைபெற்றது. பெட்ரோல், டீசல், கேஸ் பொருட்களின் மீதான வரிகளைக் நீக்க வேண்டும், அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும், ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும், வேலைவாய்ப்பை பெருக்கி அரசு துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், விவசாயம், விவசாயி மற்றும் விவசாய தொழிலாளர்களை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக., மாவட்ட துணைச் செயலாளர் நீலவானத்து நிலவன், விசிக., ஒன்றிய செயலாளர் கதிர்வேந்தன், விசிக., நாமகிரிப்பேட்டை பேரூர் செயலாளர் நந்தன், விசிக., சிராப்பள்ளி பேரூர் செயலாளர் பெரியசாமி, புதுப்பட்டி பேரூர் செயலாளர் பாவரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, செல்வராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பழனிசாமி, ரஜினி, வசந்தா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






















