திருவண்ணாமலை அக்.3-

நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரடி காணொளி மூலம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளேரி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சுதா சுப்ரமணியன் அவர்களிடம் உரையாற்றினார்.

மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்
‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு இலவசமாக குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.  இந்திய அளவில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வெள்ளேரி பஞ்சாயத்தில் மொத்தம் 412 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் வீடுகளுக்கு 100 லிட்டர் குடிநீர் வழங்கும் பணி முடிக்கப்பட்டதில், தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஊராட்சிகளில் தமிழ்நாடு மாநிலம், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வெள்ளேரி கிராம ஊராட்சியும் ஒன்றாகும்.

இதன்படி, 02.10.2021 முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்ற நாடு தழுவிய கிராம சபை கூட்டத்தில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் வெள்ளேரி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சுதா சுப்பிரமணியன் அவர்களிடம் நேரடி காணொளி மூலம் கலந்துரையாடினார்.

தற்போது நிலவி வரும் கோவிட்-19 நோய் பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் முறையான முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்காணொளி நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் .ப.தட்சிணாமூர்த்தி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மு.பிரதாப், துணை ஆலோசகர், ஜல்சக்தித் துறை (குடிநீர் மற்றும் சுகாதாரம்) முரளிதரன், ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் பொ.ஆனந்த்ராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா திடட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.பெ.சந்திரா, ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.இரா.க.கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார ஊராட்சி ரூ  கிராம ஊராட்சி ) மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here