கும்பகோணம், நவ. 28 –

கும்பகோணம் அகில் உள்ள தாராசுரத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் இலவசமாக மதுபானம் கேட்டு தராததால், அங்குள்ள மூன்று பேரை பீர் பாட்டில் கொண்டு தாக்கிய வாலிபரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து, இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மூன்று பேரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

தாரசுரம் மார்க்கெட் அருகே உள்ள அரசு மதுபானக் கடையை அதில் பணிபுரியும் ஊழியர்கள் நண்பகல் 12 மணி அளவில் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது இன்று மதியம் 3 மணி அளவில் தாராசுரம் மிஷின் தெருவை சேர்ந்த டைப் ஐயப்பன் என்பவர் அக்கடையில் கடையில் ஓ.சி யில் மதுபானம்  கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு கடை காசாளர் வீரமணி தர மறுத்துவிட்டார். இந்நிலையில் காசாளர் வீரமணியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அதே கடையில் ஊழியராக பணிபுரியும் செந்தில்குமார்,  ரவிசந்திரன் சோசியல் மது தரமாட்டோம் என்று மறுத்ததால் அவர்களிடமும் தகராறு செய்துள்ளார்.

மேலும் கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன் மூவரையும் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்தார். இதனையடுத்து கடை விற்பனையாளர் இச்சம்பவம் குறித்து, கிழக்கு  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர்  படுகாயமடைந்த அவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து டைப் அய்யப்பன் என்பவரைக் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here