திருவண்ணாமலை ஜன.8-

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் மானிய கடனுதவி வழங்கப்படுகிறது.

அதன்படி பெண்கள் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாடு திட்டம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவமனை அமைத்தல் ஆகியவற்றுக்கு கடன் வழங்கப்படுகிறது. வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் 2.50 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலம் வாங்கலாம். நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பின்படி திட்டம் தொகை கணக்கிட்டு 30 சதவிதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25லட்சம் மானியம் வழங்கப்படு மீதமுள்ள தொகை கடனாக பெறலாம். நில மேம்பாடு திட்டத்தின்கீழ் நிலவளத்தை மேம்படுத்துதல் ஆழ்குழாய் கிணறு திறந்த வெளி கிணறு பைப்லைன் அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம் மருத்துவ மையம் மருந்தியல் கண்கண்ணாடியகம் முடநீக்குமையம் ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் போன்றவற்றுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது. எனவே தகுதியுள்ள நபர்கள் உரிய சான்றுகளுடன் இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here