மீஞ்சூர், ஏப். 26 –
மீஞ்சூர் நகர அதிமுக சார்பில், நேற்று, மீஞ்சூர் பஜார் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகர அதிமுக செயலாளர் பட்டாபிராமன் தலைமை வகித்தார். நகர துணை செயலாளர் எம்.வி. தமிழரசன், வழக்கறிஞர் மாரி, உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுகச் செயலாளரும் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் அக்கோடைக்கால நீர் மோர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்,
முதல் தினத்தை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு, தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, மோர், குளிர்பானங்கள், உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்வின் போது திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளருடன் திரளான அதிமுக கட்சித் தொண்டர்கள் உடனிருந்தனர்.



















