திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் தன்னை வெற்றிப் பெற செய்தால் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்று தருவதாகவும், மேலும் வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்து பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பூண்டி, நெய்வேலி, மோவூர், சதுரங்கப் பேட்டை, ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், சென்றாபாளையம், ராமஞ்சேரி, தோமூர், கனகம்மாசத்திரம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பிரதமர் மோடி அரசின் கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகள் மற்றும் பொது மக்களுக்கு செய்த நலத்திட்ட பணிகள் குறித்தும் விளக்கி கூறியதோடு வீடுவீடாக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார். பின்னர் பூண்டி கூட்டுச் சாலையில் பிரச்சாரத்தின் பேசிய வேட்பாளர் பொன்.பாலகணபதி என்னை வெற்றி பெற்ற செய்தால். திருவள்ளூர் மக்களவைத் தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தருவேன், என்றும் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்று தருவதாகவும், வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் தருவதாகவும், அவர் உறுதி அளித்தார்.






















