திருவாரூர், ஜன. 22 –

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே  ‘ரோக நிவர்த்தி’ பரிகார ஸ்தலமான திருதலையாலங்காடு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ நர்த்தனபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில், தை அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

(20.01. 2023) நேற்று வெள்ளிக்கிழமை, மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய ‘தை அமாவாசை பெருவிழா’ வில் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது..

இந்நிகழ்விற்காக இன்று மதியம் ஆலயத்தில் இருந்து பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பட்டு வீதி உலா வந்து, கோவில் முன் உள்ள சங்கு தீர்த்த திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கு தீர்த்தத்தில்  புனித நீராடினார்கள். அதனைத்தொடர்ந்து, சுவாமிக்கு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் மற்றும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here