பூவிருந்தவல்லி, ஏப். 14 –
சட்டமாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைவரும் அவரது புகழைப்போற்றும் வகையில் அவரது திருவுருவச்சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னை அடுத்துள்ள பூவரிந்தவல்லி ஊராட்சி ஒன்றஇயத்திற்குட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் உமாமேஸ்வரி எனும் இல்லத்தரசி தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள புரட்சியாளரும் சட்ட மாமேதையுமான அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தும் மலர்தூவியும் அவர் புகழ் சிறக்க மரியாதைச் செலுத்தினார்.
இந்நிகழ்வினை கண்டவர்கள் அவர்களை பெரிதும் பாராட்டிச் சென்றார்கள். மேலும் கட்சிகள் தாண்டி சமூக அமைப்புகள் என்பதையும் தாண்டி தனிமனிதர்களாக தன்னெழுச்சியாக வந்தும், மேலும் அண்ணல் அம்பேத்கர் பெண்களுக்கான சமவுரிமைக்காக பாடுப்பட்டதை உணர்ந்து வந்து அன்னாரின் புகழைப்போற்றும் படி நடைப்பெற்ற இச்செயல் அப்பகுதி மக்கள் அனைவராலும் வெகுவானப் பாராட்டினைப் பெற்றதென்பது குறிப்பிடத் தக்கதாகும்.