காஞ்சிபுரம், பிப். 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …

வளையக்கரணை ஊராட்சி தலைவரை நலத்திட்டப் பணிகளை செய்ய விடாமல் தடுத்திடும் துணைத்தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவ்வூர் மக்கள் 25 க்கும் மேற்பட்டவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையக்கரணை ஊராட்சி பகுதியில் மூன்று கிராமங்கள் உள்ளது. மேலும் அவ்வூராட்சித் தலைவராக ராஜன் என்பவரும், துணைத் தலைவராக துரைசாமியும் உள்ளார். மேலும் அவ்வூராட்சியில் தலைவர் உள்ளிட்ட 6 உறுப்பினர்களை கொண்ட அவ்வூராட்சியில், தலைவர் அவ்வூராட்சி மக்களுக்கு செய்ய வேண்டிய பல்வேறு நல மற்றும் வளர்ச்சித்திட்டங்களை செய்யவிடாமல் துணைத் தலைவரோடு சேர்ந்துக் கொண்டு,அவ் ஊராட்சி வார்டு உறுப்பினர்களான சந்திரா, கோவிந்தராஜ், கேசவன், ராஜேஸ்வரி , அமரன் ஆகியோர் தடுத்து வருவதாக 25 க்கும் மேற்பட்ட அக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அதனைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கிராமத்திற்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக செயல்படும் துணைத் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்து மனு அளித்தனர்.

மேலும் அப்புகார் மனுவில் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மக்களுக்கு தேவையான அனைத்தையும் சிஎஸ்ஆர் பணம் மூலம் ஏற்பாடு செய்து வருவதாகவும் ஆனால் அதை செய்ய விடாமல் அவப்பொழுது தடுத்து நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

அதனால் ஊராட்சியில் அனைத்து விதமான மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் உரிய நேரத்தில் கிடைத்திடாமல் அவர்கள் தடுத்து நிறுத்துவதால், அவரால் எப் பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் ஊராட்சி பின்னடைவை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here