மயிலாடுதுறை, மார்ச். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியளர் சந்திரசேகர்

மயிலாடுதுறை மாவட்டம், வெள்ளை மணல் கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளும், வீடு கட்ட அனுமதியும் வழங்காததால், அக்கிராம மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறங்களிக்க போவதாக தெரிவித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனுவளித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளை மணல் என்பது மீனவர் கிராமமாகும். மேலும் அங்கு 100 மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 70 ஆண்டுகளாக, குடிநீர் வசதி, சாலைவசதி போன்ற அடிப்படைகள் எதுவும் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தோடு அவர்கள் அங்கு வாழ்ந்து வருவதாக அம் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அவர்கள் அப்பகுதியில் வீடுகள் கட்டிகொள்ள அரசு அனுமதி வழங்குவதில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதுக்குறித்து அரசு அளித்திடும் விளக்கம் அவர்கள் வசிக்கும் பகுதி வனத்துறைக்கு சொந்தமானது எனவும், அதனால்தான் கடந்த 70 வருடங்களாக நிரந்தர வீடுகள் கட்டிகொள்ள அரசு அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்நிலையில் அவர்கள் அப்பகுதியில் வீடுக் கட்டிக்கொள்ள பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும், வணத்துறையிலிருந்து அனுமதி வரவில்லை என காலம் கடத்தி வருகின்றனர். அதனால் அக்கிராமவாசிகள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம், தங்கள் கிராமத்திற்கு இதுவரை அடிப்படை வசதிகள் செய்து தராததை முன்னிட்டு வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறங்கனிக்க போவதாக மனுவினை வழங்கினார்கள்.

பேட்டி:

சேகர் (வெள்ளை மணல் கிராமவாசி)

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here