திருவாரூர், பிப். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலதிருப்பாலக்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் மற்றும் பிள்ளையார் கோவில்கள் மிகவும் பழுதடைந்து இருந்தநிலையில். அவ்வூரைச் சேர்ந்த இளங்கோவன் மூலமாக சிங்கப்பூரில் இருந்து மேலத்திருப்பாலக்குடி கிராமத்திற்கு வந்த சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ஹரி லிங்கம் என்பவர் அக்கோயிலின் நிலை கண்டு உடனடியாக அவ்விழண்டு கோயிலையும் நான் கட்டித் தருகிறேன்  என்று தன்னுடைய நண்பர் இளங்கோவனுக்கு வாக்கு கொடுத்துள்ளார்.

மேலும் அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் சென்ற ஹரி லிங்கம் தன் குடும்பத்தாரிடம் கோவில் விவகாரம் குறித்தும் தன்னுடைய நண்பருக்கு அவர் கொடுத்த வாக்கு குறித்தும் கலந்து பேசி மீண்டும் மேலதிருப்பாலக்குடி கிராமம் வந்து ஹரி லிங்கம் தன்னுடைய பெரும் நிதி மற்றும் தன் குடும்பத்தாரின் நிதி மற்றும் ஊர் மக்களின் நிதி ஆகியவற்றை கொண்டு பிரம்மாண்டமாக இரண்டு கோயில்களையும் கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் அதோடு அவ்வூர் மக்களுக்காக ஒரு கலையரங்கத்தையும் கட்டிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த கிராமத்தில் இந்த இரண்டு பெரிய கோயில்களையும் கட்டிக் கொடுத்த சிங்கப்பூர் வாழ் தமிழர் ஹரிலிங்கம் சிங்கப்பூரில் இம் மாதம் பிப்ரவரி 7ஆம் தேதி அன்று இயறைக்கை எய்தினார்.

அம் மரணச் செய்தியைக் கேட்ட அக்கிராம மக்கள் மிகுந்த சோகத்திற்கு ஆளாகினார்கள் அதன் பிறகு அவர் நினைவாக அவருடைய உருவப்படத்தை வைத்து பிரம்மாண்ட பேரணியும் அவர் புகைப்படம் தாங்கிய பல டிஜிட்டல் பிளக்ஸ் போர்டுகளையும் ஊர் முழுக்க அடித்து வைத்திருந்தார்கள்.

அத்தோடு நின்று விடாமல் அவர் செய்த மிகப்பெரிய உதவியை எண்ணி அவருக்காக அவ்வூர்  மக்கள் பதினைந்து நாட்கள் துக்கம் அனுசரிக்க வேண்டும் என தீர்மானித்து அவர் இறந்தது முதல்  பதினைந்தாம் நாள் காரியம் முடியும் வரை அவருக்காக அந்த ஊரில் அவர் கட்டிய மகா மாரியம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள அவர் கட்டிய  கலையரங்கத்தில் நாள்தோறும் அமர்ந்து துக்கம் அனுசரித்தார்கள்.

இந்நிலையில் அவருக்கு சிங்கப்பூரில் 15 ஆம் நாள் காரியம் முடிந்த நிலையில் அவ்வூர் மக்கள் அவர் நினைவாக 15 நாள் துக்கம் அனுசரித்து விட்டு இறுதியாக ஊர் பெரியவர்களை வைத்து இரங்கல் கூட்டம் நடத்தி அவரைப் பற்றி நினைவு கூர்ந்தார்கள். ஊர் மக்கள் அனைவரும் ஹரி லிங்கம் திரு உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

 

அந்நிகழ்வில் பங்கேற்ற அவ்வூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரும் அங்கு வந்து  ஹரிலிங்கம் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது

அந் நினைவேந்தல்  நிகழ்ச்சியில் சிங்கப்பூரிலிருந்து ஹரி லிங்கம் அவர்களின் நெருங்கிய உறவினர் வருகை தந்து , 15 நாட்களாக துக்கம் அனுசரித்து நன்றியை வெளிப்படுத்திய ஊர் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here