திருவள்ளூர், ஜூலை. 29 –

இந்திய தேர்தல் ஆணையத்தால் ஜனவரி 01 – 2024 ஆம் நாளினை தகுதியேற்பு நாளாக கொண்டு, எதிர் வரும் ஜன 05 ஆம் நாளன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம்கள் நடத்தி எதிர் வரும் ஜனவரி 05 – 2024 அன்று வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.

அதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் முன் திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்களர் விபரங்களையும் சரி பார்க்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

அதன்படி கடந்த ஜூலை 21 முதல் எதிர் வரும் ஆகஸ்ட் 21-2023 ஆம் தேதிவரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்து, தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம், கட்ட ட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதன் முன் திருத்த நடவடிக்கையின் முதற்கட்ட நடவடிக்கையாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக குடும்பத்தில் உள்ள வாக்காளர் விபரங்களை சரிப் பார்த்திட வருகை தரவுள்ளனர். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாகவும், விரிவாகவும் மேலும் நூறு சதவீதம் தூய்மையாகவும், துரிதமாகவும் இப்பணியினை முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிக்கு வரும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான முழு விபரங்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியாளருமான டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here