திருத்தணி, மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருத்தணி அருகில் உள்ள பொன்பாடி மேட்டு காலனி பகுதியை சேர்ந்த ரஞ்சனி வயது 18 என்ற தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மேலும் அதுக் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலை அடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் திருத்தணி போலீசார் உரிய விசாரணை செய்யவில்லை என்றும் இறந்து போன மாணவியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் என்று தவறான செய்தி வெளியிட்ட காலை நாளிதழ் செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் மாணவியின் உறவினர்களிடம் செய்தியாளர் மீது உரிய விசாரணை எடுக்கப்படும் என்று அவரளித்த வாக்குறுதியை ஏற்று சாலை மறியல் ஈடுபட்டவர்கள் அப்பகுதியில் இருந்து அமைதியாக கலைந்து சென்றனர். அதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.