வலங்கைமான், ஏப். 03 –
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் அருள்மிகு ஸ்ரீசீதளா தேவி மகாமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் ‘பாடை காவடி’ திருவிழா என்பது மிகவும் உலக பிரசித்தி பெற்றதாகும். மேலும் அவ்விழாவின் தொடர்ச்சியாக நேற்றிரவு 12 மணி அளவில் புஷ்ப பல்லாக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் இத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மனை வழிப்பட்டனர்.
மேலும் இவ்விழாவினை முன்னிட்டு நேற்றிரவு சரியாக 12 மணி அளவில் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து புஷ்ப பல்லக்கில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத்தொடர்ந்து நாதஸ்வர தவில் வித்வான்கள் கலந்து கொண்ட இசைக்கச்சேரி நடைபெற்று மகாதீபாரதனையுடன் புஷ்ப பல்லாக்கு புறப்பட்டு வீதிகளை வலம் வந்தது.
மேலும் இத்திருவிழாவில் பங்கேற்று அம்மனை வழிப்பாடு செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். மேலும் விடிய விடிய நடைப்பெற்ற இவ்விழா பாதுகாப்புப் பணியில் இரவு முழுவதும் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். மேலும் இவ்விழாவிற்காக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர சிறப்பு பேருந்து வசதிகளை மாவட்ட மற்றும் உள்ளூர் அரசு நிர்வாகமும் திருக்கோயில் நிர்வாகமும் ஏற்பாடு செய்திருந்தனர்.