காஞ்சிபுரம், ஏப். 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …

ஜேசிபி இயந்திரம் மூலம் தூவப்பட்ட 50 கிலோ ரோஜாப்பூக்கள்.. கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்..

ஓட்டிவாக்கம் பகுதியில் மாட்டு வண்டியில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் செல்வம்..

மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் , முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக வேட்பாளர் க. செல்வம் 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் வாக்குகளைக் கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட , தாமல் , பொன்னியம்மன் பட்டறை , முட்டவாக்கம், மேல் ஒட்டிவாக்கம் , பாலு செட்டிச்சத்திரம், திருப்புகுழி , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் செல்வம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் .

பாலுசெட்டி சத்திரத்தில் ஜேசிபி இயந்திரத்தில்   50 கிலோ ரோஜா பூக்களை கொட்டி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். மேலும் கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்தும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இருபுறமும் நின்று கொண்டு , பன்னீர் ரோஜாக்களை தூவி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஓட்டிவாக்கம் கிராமத்தில் மாட்டு வண்டியில் சென்று மாட்டு வண்டி ஓட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கொடிகள் உடன் ஊர்வலமாக வந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.‌

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here