சென்னை, மார்ச். 12 –
“தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி தொடர்பான உங்களுடைய புதுமையான படைப்புகளை அனுப்பி விட்டீர்களா?”
இந்திய தேர்தல் ஆணையமானது தேசிய அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு போட்டியினை கீழ்க்கண்ட தலைப்புகளில் நடத்தி வருகிறது:
- வினாடி வினாப் போட்டி
- காணொலிக் காட்சி (video) தயாரிக்கும் போட்டி
- பாட்டுப் போட்டி
- விளம்பரப்பட வடிவமைப்பு போட்டி
- வாசகம் எழுதுதல் போட்டி
இதில் வாக்காளர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமான பதிவுகளை விளம்பரப் படம், காணொலிக் காட்சி, பாடல்கள் மற்றும் வாசகங்கள் போன்ற வடிவத்தில் voter-contest@eci.gov.in <mailto:voter-contest@eci.gov.in> என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். சிறந்த பதிவுகளுக்கு அற்புதமான பணப்பரிசுகள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான கடைசி தேதி 15.03.2022. மேலும், தகவல்களைப் பெறுவதற்கு “<https://ecisveep.nic.in/contest/>” என்ற இணையதளத்தைக் காணலாம். உங்களுடைய புதுமையான படைப்புகளை இதுவரை அனுப்பவில்லையெனில் கவலை வேண்டாம் 15 மார்ச், 2022-க்குள் அனுப்பவும். வாய்ப்பினை தவறவிடாதீர்கள்.






















