திருவள்ளூர், ஆக. 14 –

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் தமிழக தலைமை செயலர் இறையன்பு, ஊரக வளர்ச்சி துறை ஆணையர் தாரேஸ் அகமது, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்ற தலைமைச்செயலர் இறையன்பு, தலைவர், துணை தலைவர், மற்றும் வார்டு உறுப்பினர்களுடன்  ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் மற்றும் குறைகளையும் கேட்டறிந்தார்.

ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக உள்ளதா, எத்தகைய பணிகள் நடைபெறுகிறது என்பது போன்றவைகளை அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து, ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில்  பட்டியலினத்தைச் சேர்ந்த  அவ்வூராட்சி மன்றத் தலைவர் அமிர்தம்மாள் தலைமை செயலர் இறையன்பு முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வீர வணக்கம் செலுத்தினார்.

கடந்த 2020- ஆம் ஆண்டு ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பட்டயலின பெண் ஊராட்சி மன்ற தலைவரை தேசிய கொடி ஏற்ற விடாமல் தடுத்ததைப் போன்ற நிகழ்வு, இம்முறை ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமை செயலர் இறையன்பு முன்னிலையில் ஊராட்சிமன்ற தலைவர் தேசிய கொடி ஏற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 23 சதவீதம் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here