பொன்னேரி, டிச. 07 –
கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கன மழையின் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள மழை நீர் புகுந்தது.
அதனால் இன்று வரை மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி கடந்த ஞாயிறு நள்ளிரவு முதல் தமிழ்நாடு மின்வாரியம் மின்சார சப்பளையை நிறுத்தி வைத்தது. அதனால் மக்கள் பெரிதும் பாத்திப்புக்குள்ளானர்கள். இருப்பினும், கடந்த நான்கு நாட்களாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்துறை, காவல் மற்றும் தீயணைப்பு மீட்புக்குழு, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்பில் மேலும் துரித நடவடிக்கைகளின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் வழங்கல், பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான மருத்துவம் உணவு குடிநீர் போன்ற உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
இருப்பினும், பொன்னேரி வட்டாரப் பகுதியில் இன்னும் மின்சார வினியோகம் வழங்கப்படாததால் அப்பகுதி வாழ் மக்கள் தங்கள் பொறுமைகளையிழந்து, ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியல்.போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்தில் கடந்த ஒரு வார காலமாக செய்து வந்த மழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தால் பொன்னேரி வட்டாரத்திற்குட்பட்ட மீஞ்சூர், பெரியகாவனம், திருவெள்ளைவாயல், பரிக்கப்பட்டு, உப்பளம், உள்ளிட்ட பகுதிகளில் புயல் தாக்கத்தால் பெரியளவு மின்கம்பங்கள் சாய்ந்து மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
தற்போது மழை நின்று இரு தினங்கள் ஆன பின்னும் அதனை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காலம் தாமதம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுப்பி ஆங்காங்கே அப்பகுதி வாழ் கிராம மக்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத் தகவலிறிந்து அங்கு விரைந்து வந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி, மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். மேலும் மின் விநியோகம் செய்திட உடனடி நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்ற அவர்கள் அளித்த உறுதிமொழியேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் ஏற்பட்ட போக்கு வரத்துப் பாதிப்பால் பேருந்து மற்றும் வாகனங்களில் பயணித்தவர்கள் தொடர்ந்து பயணிக்க முடியாமல் பரிதவித்தனர்.