பொன்னேரி, பிப். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று மாணாக்கர்களுக்காகன தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர்கள், தமிழ், கஸ்தூரி உள்ளிட்டவர்கள்  தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் அந்நிகழ்ச்சிற்கு பொன்னேரி நகராட்சியின் தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். அந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த பொன்னேரி சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர் துரை சந்திரசேகர், பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் கல்வி பயிலும் 541 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அந்நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர்சங்க தலைவர் காத்தவராயன், கவுன்சிலர்கள் , கவிதா விஜி,கோவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் செல்வம், சின்னமணி  மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று விழாவிற்கு சிறப்புச் சேர்த்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here