பட்டுக்கோட்டை, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், உழைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் பட்டுக்கோட்டையில் நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பேண்ட், வாத்தியம் முழங்க அனைத்து சங்க தொழிலாளர்களின்
மே தின பேரணி மிகப் பிரமாண்டமாக நடைப்பெற்றது. மேலும் அப்பேரணியில் ஆட்டோவுடன் கலந்துக் கொண்ட ஆட்டோ தொழிலாளர்கள் உள்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் அப்பேரணியை பெண் வருவாய் கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்.
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் உழைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் பட்டுக்கோட்டை நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அனைத்து சங்க தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து இன்று மே தின பேரணியை நடத்தினர். பேண்ட், வாத்தியம் முழங்க பேருந்து நிலையம் பெரியார் சிலையிலிருந்து புறப்பட்ட மே தின பேரணியை பட்டுக்கோட்டை பெண் வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தொடங்கி வைத்து பேரணியில் நடந்து சென்றார். மே தின பேரணி பழனியப்பன் தெரு, மணிக்கூண்டு, பெரிய தெரு, பெரியகடைத்தெரு, மார்க்கெட் வழியாக அறந்தாங்கி ரோடு முக்கம் காந்தி சிலை அருகில் முடிவடைந்தது. பேரணியில் ஆட்டோவுடன் ஆட்டோ தொழிலாளர்கள், அனைத்து சங்க தொழிலாளர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




















