கும்பகோணம், ஜன. 12 –

கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 21 வது வார்டில் கரும்புகள் காய்கறிகள் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 21வது வார்டு  அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பெருசு என்கிற ராமூர்த்தி தலைமையில் 1035 பயனாளிகளுக்கு காய்கறிகள் மஞ்சள் கொத்து இஞ்சி கொத்து 2 கரும்பு மற்றும் பொங்கல் தொகுப்புகளை நகர செயலாளர் குருமூர்த்தி மற்றும் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஆதிலட்சுமி ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here