சென்னை, டிச. 29 –

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 143.15 கோடியைக் கடந்தது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64,61,321 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 143.15 கோடியைக் (1,43,15,35,641) கடந்தது. 1,52,69,126 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. என அதன் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7,347 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,42,51,292 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.40 சதவீதமாக உள்ளது.  இது கடந்த மார்ச் 2020க்கு பிறகு அதிக அளவாகும். மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 62  நாட்களாக 15,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,195 பேருக்குப் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 77,002 ஆக உள்ளது; நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.22 சதவீதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு. கடந்த 24 மணி நேரத்தில் 11,67,612 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார்  67.52 கோடி கொவிட் பரிசோதனைகள் (67,52,46,143) செய்யப்பட்டுள்ளன. வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 45 நாட்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 0.68 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.79 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 86 நாட்களாக 2 சதவீதத்திற்குக் கீழே 121 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here