திருவள்ளூர்; செப், 09 – திருவள்ளூர் மாவட்டத்தில் கொலை கொள்ளை வழிப்பறி போன்ற கொடுஞ்செயல் குற்றங்களில்  ஈடுப்பட்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் அனைத்து உட்கோட்ட காவல் அதிகாரி களுக்கும் உத்தரவு அளித்ததை தொடர்ந்து, பொன்னேரி உதவிக் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, மற்றும் கும்மிடிப்பூண்டி உட்கோட்ட காவல் துணைக் கண் காணிப்பாளர் கல்பனா டட் ஆகியோர் பொன்னேரி கும்மிடிப்பூண்டி உட்கோட்ட காவல் ஆய்வர்களுக்கு மாவட்டக் கண் காணிப்பளரின் ஆணையை ஆவன செய்யும் படி வழியுறுத்தியதின் அடிப்படையில் கொடுஞ் செயல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க  கண்காணிப்புப் பணி மாவட்டத்தில் தீவீர படுத்தப் பட்ட நிலையில் கடந்த 5 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் கையில் துப்பாக்கி யுடனும் , ஒரு அடி நீளம் கொண்ட கத்தியுடனும் திரிந்துக் கொண்டிருந்த புது கும்மிடிப்பூண்டி கண்டிகையை சேர்ந்த நந்தன் என்பவரின் மகன் 28 வயதுடைய மணிகண்டன் என்ற போண்டா மணி மற்றும் கோடுபள்ளிக்கிராமம் மாகரல் கண்டிகையை சேர்ந்த குமார் என்பவரின் மகன் 28 வயதுடைய யுவராஜ் என்பவரையும் பொதுமக்களின் உதவியுடன் 4 பேர் கொண்ட கும்மிடிப்பூண்டி உட்கோட்ட உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான குமரன், தினேஷ், மற்றும் சிப்காட் காவல் நிலைய தங்கராஜ் உட்பட்ட சிறப்பு தனிப்படை குழு வழிப்பறி கொள்ளையர்களை பிடித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பணம் ரொக்கம் ரூ.300 கையகப்படுத்தி அவர்கள் மீது  வழக்கு பதிவு செய்து விசாரணை நடைப்பெற்று வருவதாக மாவட்ட காவல் நிர்வாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here