கும்மிடிப்பூண்டி, மார்ச். 28 –

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் வினா ஸ்ரீ யோகா பயிற்சி பள்ளியை சேர்ந்த பி.வி மேகபிரியா. எலைட் மெட்ரிக் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

வெங்கடரமணா – சந்திரா ஆகிய தம்பதியரின் மகளான இவர் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட தீவிர பயிற்சியின் பலனாக நேற்று முன்தினம் எலைட் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நோபல் உலக சாதனை முயற்சியில் சீக்கியாசனத்தை 5 நிமிடத்தில் 159 முறை செய்து உலக சாதனை படைத்தார்.

எலைட் பள்ளியின் ஒத்துழைப்பும் யோகா பயிற்றுனர்கள் காளத்தீஸ்வரன், அர்ச்சனா, வித்யா மற்றும் சங்கீதா ஆகிய யோகா ஆசிரியர்களின் ஊக்குவிப்புமே இந்த சாதனை படைக்க காரணம் என கூறிய பள்ளி மாணவி, மாவட்ட, மாநில மற்றும் தென்னிந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here