கும்பகோணம், டிச. 29 –
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அக்கூட்டத்தில் 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அம் மாமன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின் அதில் மிக முக்கியமான 13 கோரிக்கைகளை ஏன் தீர்மானமாக நிறைவேற்றவில்லை என மேயரிடம், துணை மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள், கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது மாநகராட்சி மேயர் சரவணன், மாமன்ற கூட்டம் முடிந்து விட்டது அனைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனக் கூறியப் படியே இருக்கையை விட்டெழுந்து வெளியே செல்ல முயன்றார்.
அப்போது இடை மறித்து, துணை மேயர் தமிழழகன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மேயர் சரவணனை முற்றுகையிட்டு 13 தீர்மானங்கள் ஏன் நிறைவேற்றவில்லை என்று காரணம் சொல்லிவிட்டு வெளியே செல்லுங்கள் என்றாவறு குரலெழுப்பினார்கள், தொடர்ந்து 13 தீர்மானங்களை உடனே நிறைவேற்றக்கோரி மேயரை முற்றுகை இட்டதால் கும்பகோணம் மாமன்றத்தில் பரபரப்பு நிலவியது.
விடுப்பட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றும் வரை உங்களை வெளிநடப்பு செய்ய விடமாட்டோம் என்று தொடர்ந்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் முற்றுகையிட்டு வந்தனர். அதற்கு அதிமுக மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாமன்ற உறுப்பினர்கள் அதரவு தெரிவிக்காத நிலையில் அக்கூட்டத்தில் தொடர்ந்து குழப்பத்துடன் கூடிய காரசாரமான விவாதங்கள் நடைப்பெற்று வந்தது.