தத்துவாசேரி, சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட தத்துவாசேரி பகுதியை சேர்ந்தவர் மறைந்த ராமாமிர்தம் தொண்டைமான் மேலும் அவர் 1957ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் ஆடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் மறைந்த தியாகி ராமாமிர்தம் தொண்டைமானுக்கு முழு உருவ சிலை அப்பகுதியில் நிறுவப்பட்டு அச்சிலை திறக்கும் நிகழ்ச்சி முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் தலைமையில் தத்துவாசேரியில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி ராமாமிர்தம் தொண்டைமான் அவர்களின் முழுவுருவச் சிலையை திறந்து வைத்தார். அப்போது மதிமுக முதன்மை செயலாளர் துரை. வைகோ, திமுக மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், சிபிஐஎம்எல் மாநில செயலாளர் ஆசைத்தம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கந்தவர்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், மேயர் சரவணன், துணை மேயர் தமிழழகன், விசிக மண்டல செயலாளர் விவேகானந்தன், மாவட்ட செயலாளர் முல்லைவளவன், மதிமுக மாநில துணைச் பொதுச் செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அந்நிகழ்வின் நிறைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கும் போது, அயோத்தி அரசியல் இந்தியாவில் எந்த ஒரு மாற்றத்தையும் தராதெனவும், மேலும் அயோத்தியில் 3200 ராமர் கோயில் உள்ளது. நேற்றுயுடன் 3201 வது ராமர் கோவில் என்ற நிலை மட்டுமே என்றார்.
இந்தியாவில் எந்த பகுதியில் கும்பாபிஷேக விழா நடைபெற்றாலும் அந்த பகுதி விசேஷமாக தான் இருக்கும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ராமர் கோயில் வேண்டாம் என இஸ்லாமியர்களும் கூறவில்லை, கிருஸ்தவர்களும் வேண்டாம் என சொல்ல வில்லை. பா.ஜ.க. தான் பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதாக சொன்னார்கள் தற்போது நடந்து உள்ளது என்ன ?
அயோத்தியில் எங்கே வேண்டும் என்றாலும் ராமர் கோவில் கட்டலாம் என்று நாம் சொன்னோம். ஆனால் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டவில்லை. மூன்று கிலோ மீட்டர்க்கு அப்பால் கட்டி இந்திய மக்களை திறமையாக நம்ப வைத்துள்ளார்கள். மேலும் கோவில் கும்பாபிஷேகத்தை பாஜக அரசியல் ஆக்குகிறார்கள். எனத் தெரிவித்தார்.






















