நன்னிலம், மார்ச்.10

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே. நாகராஜ்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள தென்குடி ஸ்ரீ அங்காளிபுரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீ காமேஸ்வர் மற்றும் காமேஸ்வரிக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மகா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம்  இன்று நடைபெற்றது.

திருக்கல்யாணத்தை  முன்னிட்டு முன்னதாக சுவாமிகள் மணமக்கள் கோலத்தில் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் வரிசை பொருட்களை எடுத்து வந்தனர். பிறகு சுவாமிகளுக்கு கங்கணம் கட்டும் வைபோகம் நடைபெற்று தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம் மற்றும் மாங்கல்ய தாரணம் எனும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இந்த நிகழ்வை தொடர்ந்து அங்காளம்மன் சக்தி பீடத்தின் சார்பாக அமைக்கப்பட்ட கோசாலை திறக்கப்பட்டு கோகுல கிருஷ்ணனுக்கு அபிஷே ஆராதனை நடைபெற்றது..

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு மயானக்கொள்ளை எனும் மயானத்தில் பக்தர்களுக்கு பொருட்கள் வாரி இறைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நேற்று இரவு கும்ப படையல் எனும் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி நடைபெற்றது.

இவ்வாலயத்தில் எந்த ஒரு கட்டணம் இல்லாமல் பரிகாரம் மற்றும் குறி சொல்லும் நிகழ்வு வாரம் ஞாயிறு செவ்வாய் வெள்ளி கிழமை மற்றும் அமாவாசை பௌர்ணமி தினத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது குறி கேட்கும் மற்றும்  பரிகாரம் செய்யும் பக்தர்கள்  அர்ச்சனை பொருட்கள் மற்றும் 10 எலுமிச்சை பழங்கள் மட்டும் எடுத்து வந்தாலே போதும் என ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கின்றனர்.

இவ்வாலய நிர்வாகத்தினை டாக்டர் அப்புவர்மா மற்றும் காயத்ரி அப்புவர்மா மேலும் தென்குடி அங்காளம்மன் சக்தி பீடம் சார்பில் நடைபெற்றது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here